2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சிறுவன் துஷ்பிரயோகம்: இருவர் கைது

Thipaan   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, ஜமாலியா பகுதியில் 10 வயது சிறுவனை கடற்கரையோரத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஏழு பேரில் இரண்டு பேரை, நேற்றிரவு (08)  செய்துள்ளதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜமாலியா கடற்கரையில் நின்று கொண்டிருந்த சிறுவன், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏழு பேர் சேர்ந்து, தன்னைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சிறுவனின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சிறுவன், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X