Editorial / 2018 ஏப்ரல் 05 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
குச்சவெளி, பொலிஸ் பிரிவிலுள்ள இறக்கக் கண்டி பகுதியில், 534 கிராம் ஜெலிக்னைட்டை வெடிபொருள் வைத்திருந்த குடும்பஸ்தரை, பொலிஸார் நேற்று (04) கைது செய்ததாக, திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலையடுத்து, நான்காம் வட்டாரம், இறக்கக்கண்டியைச் சேர்ந்த பதுர்தீன் ஜெலீல் (வயது 48) என்ற சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து, மீட்டெடுத்த 534 கிராம் ஜெலிக்னைட் வெடிபொருளையும் உரிய சந்தேகநபரையும் குச்சவெளி பொலிஸார் கைது செய்தததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025