2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு நுளம்பு ஒழிப்பு திட்டம் முன்னெடுப்பு

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -தீசான் அஹமட்

சுகாதார அமைச்சின் தேசிய  டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு,  திருகோணமலை நகரத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை  சோதனை செய்யும் நடவடிக்கை இன்று (  01) மேற்கொள்ளப்பட்டது.

வீடு வீடாகச்சென்று நுளம்பு பெருகும் இடங்களான  சிறட்டை, யோக்கட்கப், குரும்பை,  பேணிகள், நீர் தேங்கி நிற்கும் இடங்கள் போன்றவற்றை அகற்றுமாறு வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக டெங்கு நுளம்பு குடம்பிகள் (லாவா) காணப்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத்தொடரவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

இச்சுற்றிவளைப்புக்கு பொது சுகாதார அத்தியச்சகர் பணிமனையோடு இணைந்து கடற்படை மற்றும் பொலிஸாரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X