Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 மார்ச் 02 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
டெங்கு காயச்சல் காரணமாக, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 24 வயது யுவதி. சிகிச்சைப் பலனின்றி, புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியா, 3 வட்டாரம் அண்ணல் நகரைச் சேர்ந்த பாத்திமா குசைனா என்ற யுவதியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்குப் பின்னர், யுவதியின் சடலத்தை உறவினரிடம் ஒப்படைத்துள்ளதாக, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு, திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவோரில், கடந்த நான்கு தினங்களுக்குள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கிண்ணியா பிரதேசத்தில் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்தோர் தொகை நான்காக உயர்ந்துள்ளது.
காக்காமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.மர்சூக் (வயது -32), பெரிய கிண்ணியாவைச் சேர்ந்த எம்.ஜே.இப்திசாம் (வயது- 20) , மாஞ்சோலையைச் சேர்ந்த ஜே.ஜே.ஹாதீக் (வயது 07)
ஆகியோர்ரே டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 400 மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களில், 1421 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் 824 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 510 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 87 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
29 minute ago
34 minute ago