Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 ஜூன் 26 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் செயலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், தடுத்து வைக்கப்பட்டிருந்த கால்பந்து நடுவர்கள் எழுவரும், திருகோணமலை துறைமுக பொலிஸாரால், இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை விடுதலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
திருகோணமலை கால்பந்து மத்தியஸ்தர் சங்கத்தின் பொதுக்கூட்டம், நேற்று சனிக்கிழமை (25) நடைபெற்றது. அதன்போது திருகோணமலை கால்பந்து லீக்கின் தலைவரும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான உபாலி ஹேவஹே கூட்டத்துக்குத் தலைமை தாங்க முற்பட்டார். இதனை சங்க உறுப்பினர்கள் சிலர் ஆட்சேபித்தனர்.
'நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது எங்கள் சங்கத்துக்கு தலைமை தாங்க?' போன்ற வினாக்களை அவரிடம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.
இதன்பின்னர் மத்தியஸ்தர் சங்கத்தின் தலைவர் ஜோயல் ஜிப்சனும், செயலாளர் க. யோரெத்தினமும் கூட்டம் நடைபெறாது எனத் தெரிவித்து, கூட்டத்தை இடைநிறுத்தினர். இதனால் சங்க உறுப்பினர்களிடையே மனக்கிலேசம் ஏற்பட்டு வாய்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது உறுப்பினர் ஒருவர், செயலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டார்.
கூட்ட மண்டபத்தில் இருந்து வெளியேறிய செயலாளர் க.யோகரெத்தினம், துறைமுக பொலிஸில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு, ஒன்றினை பதிவு செய்து, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் செயலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், எழுவரை துறைமுக பொலிஸார் விசாரணைக்க அழைத்து, தடுத்து வைத்திருந்தனர்.
இச்சம்பவத்தைக் கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள விளையாட்டு கழகங்கங்களின் உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்ததையடுத்து, துறைமுக பொலிஸார், நடுவர்கள் எழுவரையும் விடுதலை செய்தனர். இதனால் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதன் பின்னர் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்துக்கு முன்னால் ஒன்று கூடி, அமைதியான முறையில் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நடவடிக்கைக்கும். மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளர் க.யோகரெத்தினத்தின் நடவடிக்கைக்கும் ஆட்சேபம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
1 hours ago
1 hours ago