Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எ.எம்.கீத்
திருகோணமலை கண்டி வீதி, ஐந்தாம் கட்டை பிரதேசத்தில், நேற்று (1) தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம், தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.
மேற்படி குடும்பத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு, கொவிட்19 நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவரும் அவரது குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டனர்..
எனினும் இளைஞருக்கு கொவிட் 19 வைரஸ் தாக்கம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அவரும் அவரது குடும்பமும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக, கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .