Gavitha / 2016 மே 31 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
70 ஆயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாத ஒருவருக்கு மூன்று மாதம் சிறைத்தண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க இன்று செவ்வாய்கிழமை(31) உத்தரவிட்டார்.
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், தனது மூன்று பிள்ளைகளுக்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில், ஏழு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலையில் மனைவி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்து, கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டார்.
22 minute ago
23 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
40 minute ago