Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 29 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்கள் மத்தியில் நிலவி வந்த ஒற்றுமையை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (28) மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற, டெலோ அமைப்பினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்குமிடையிலான சந்திப்பின் இறுதியில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலான சில சம்பவங்கள், அண்மைக்காலத்தில் இடம்பெற்றுள்ளன. அவை தொடருமாயின், தமிழ் மக்களின் ஒற்றுமை சீர்குலையக்கூடிய நிலையே தொடரும். அதனால் பாரிய பாதிப்புகள் ஏற்படப்போகின்றன" எனத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் ஒற்றுமை, மாகாண சபைத் தேர்தல் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சீனாவின் 91ஆவது நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது, தற்செயலாக அவரைச் சந்தித்ததாகவும், இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லையெனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், மாகாண சபைத் தேர்தலை உடனனடியாக நடத்த வேண்டுமென்ற கோரிக்கையையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இங்கு வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago