Niroshini / 2016 ஜனவரி 17 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்,எம் எஸ் அப்துல் ஹலீம்
தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி தகைமை பெற்ற தம்பலகாமம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதிகோணேஸ்வரா மகா வித்தியால கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது, குளக்கோட்டன் வித்தியாலயத்தில் 14 மாணவர்களும் சாரதா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும்,முள்ளிப்பொத்தாணை விக்நேஸ்வரா வித்தியாலயத்தில் இருந்து 1 மாணவருக்கும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி ஆகியோர் பிரதம விரந்தினர்களாகவும் தம்பலகாமம் கோட்ட கல்வி அதிகாரி சீ.மதியழகன், ஆரம்ப கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் சு.கணேசலிங்கம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

10 minute ago
19 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
31 minute ago
1 hours ago