Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள வாணாறு ஆயிலியடி முஸ்லிம் வித்தியாலய மலசலகூடக் கட்டடத் தொகுதி, ஒப்பந்தம் முடியும் முன்னரே கொங்கிறீட் மேல் தட்டு உடைந்துள்ளதென, பாடசாலை நிர்வாகம் தெரிவிக்கின்றது.
இந்தத் தரமற்ற கட்டட நிர்மாணம் சம்மந்தமாக கிண்ணியா வலயக் கல்வி பணியகத்துக்கும் மாகாண கல்வித் திணைக்களத்துக்கும், திட்டத்தைப் பார்வையிடும் பொறியியலாருக்கும் அறிவித்த போதும் அதிகாரிகள் அசமந்தமாக உள்ளனரெனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
வாணாறு ஆயிலியடி முஸ்லிம் கொலனி முஸ்லிம் வித்தியாலயத்துக்கு கல்வி அமைச்சின் மூலமாக சகல வசதிகளுடனான ஆண், பெண் இருபாலாருக்குமான மலசலகூடக் கட்டடட தொகுதி ஒன்றை, பளிங்குக்கல் பதித்து அமைப்பதற்கு 12 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்த வேலை முடியும் முன் ஒப்பந்தக்காரரின் கட்டட ஒழுங்கு இன்மையால், அதன் கூரைக்குப் போடப்பட்ட கொங்றீட் தட்டு உடைந்து விழுந்துள்ளது.
இதேவேளை, மேல் கொங்றீட் தட்டுக்குப் பதிலாக தகரம் பொருத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இப்பாடாசாலை ஒரு பின்தங்கிய கிராமத்து பாடசாலை என்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பாடசாலை நிர்வாகத்தினர் வேண்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
44 minute ago
55 minute ago
2 hours ago