Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
“அரசாங்கம் இன்று திருகோணமலைக்கு இரண்டு பாரிய திட்டங்களை வழங்கியுள்ளது. அவை, விவசாயிகளின் நலன் கருதி மாகாவலி நீரை திசை திருப்புதல் மற்றும் பல்கலைக்கழக தொழில்நுட்ப கல்லூரி அமைத்தல் போன்றனவாகும்” என, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களான விளாங்குளம், முத்து நகர் பகுதியில் குடிநீர் வழங்குவதற்கான ஆரம்ப வேலைத் திட்டங்களை நேற்று (27) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது,
“இன்று இந் நாட்டில் தற்போது வேலை இல்லாப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதனால் தொழில்நுட்ப கல்வியின் அவசியம் முக்கியமானதாகும். இதன் மூலம் இளைஞர்கள் அதிக வருமானம் பெறும் கற்கை நெறிகளை பூர்த்தி செய்யலாம்.
“இதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வாய்கால் அமைச்சு சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
“தற்போது மாகாண சபை கலைந்து உள்ளது. எதிர்வரும் வட்டார முறைத் தேர்தலில், அதிக ஆசனங்களை எமது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுள்ளன” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago