Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இம்மாதம் 20ஆம் திகதியன்று, திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளாரென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளரும் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.உவைஸ் தெரிவித்தார்.
அன்றைய தினம் கிண்ணியா, திருகோணமலை, கந்தளாய் ஆகிய பிரதேசங்களில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில், ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது, கல்வி, சுகாதாரம், காணி, மீள்குடியேற்றம், அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, மக்களின் வாழ்வாதாரம் சம்மந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக்குமென்றும், உவைஸ் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .