Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
எஸ். சசிக்குமார் / 2017 ஒக்டோபர் 10 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்திய 2017ஆம் வருடத்துக்கான ஒன்றுகூடலில், ஆண்கள் பிரிவில் கிளிவெட்டி மகா வித்தியாலயமும் பெண்கள் பிரிவில் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன.
திருகோணமலை சிங்கள மகா வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (08) வரை மூன்று தினங்கள், இந்த ஒன்றுகூடல் நடைபெற்றது.
சாரணர்களிடையே அணிநடை, மைதானக்காட்சி, தீப்பாசறை, நிலையியல் காட்சி, பரிசோதனை, சமூகசேவை, சிறந்த குறிப்புப்புத்தகம் பராமரிப்பு, வேலைவாரம் நிதி சேகரிப்பு எனப் பல்வேறு போட்டிகளும் இதன்போது நடத்தப்பட்டன.
மாவட்ட சாரணர் தலைவர் கு.பகீதரன் ஒழுங்கமைப்பு ஆணையாளராக இருந்து இதனைச் செயற்படுத்தியிருந்தார்.
இந்நிகழ்வின் ஆரம்ப நாள் அன்று, மாவட்ட சாரணர் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தலைவர் ப.டே.தம்பிப்பிள்ளை, பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஏனைய நாட்களுக்கான நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் கா.அருந்தவசெல்வம், பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
45 minute ago
53 minute ago