Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீட்
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளை நிறத் துணிகளைக் கட்டி, இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 'கவன் சீலைப் போராட்டம்' எனும் போராட்டம், திருகோணமலை மாவட்டத்தில் இன்றும் (16) முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் மணிக்கூட்டு கோபுர சந்தியில் நேற்றுக்காலை வெள்ளைத் துணிகளை கட்டி எதிர்ப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ..ஏ.அரூஸ், மூதூர் பிரதேச சபையின் சில உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, வெள்ளைத் துணிகளை கட்டி, தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன், திருகோணமலை மக்கெய்சர் மைதான வேலியிலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், பெரிய கிண்ணியா பொது மையவாடிக்கு முன்னாலும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
2 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
8 hours ago