Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 2,829 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட 47 பேர், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர பகுதியில் இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியில் ஒருவரும் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், 2,101 பேருக்கு 14 நாள்கள் சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ள நிலையில், 728 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின் மாதிரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமானால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாகத் தெரிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025