Suganthini Ratnam / 2017 ஜூன் 18 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலையில் தடைசெய்யப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில்; 40 மீனவர்கள் சனிக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மீனவர்களைக் கைதுசெய்த கடற்படையினர், திருகோணமலை மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பூர், மூதூர், இறால்குழி, கிண்ணியா, கட்டையாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இந்த மீனவர்கள், தடைசெய்யப்பட்ட கடற்பரப்பில் மூன்று கிலோமீற்றருக்கு அப்பால் சென்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மீனவர்களிடமிருந்து ரேடர் கருவிகள், தடைசெய்யப்பட்ட வலைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.
24 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago
3 hours ago