2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திறப்பு விழா...

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், வடமலை ராஜ்குமார், ஏ.ஆர்.எம்.றிபாஸ், அப்துல்சலாம் யாசீம்

இலங்கை வங்கியின், கிழக்கு மாகாண அலுவலகம், அரசாங்கத் தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற சபை மேயருமான சட்டத்தரணி லக்‌ஷ்மன் கிரியெல்லவால், திருகோணமலையில் இன்று (03) திறந்துவைக்கப்பட்டது.

205 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த மூன்று மாடிக் கட்டடம், 200க்கும் மேற்பட்ட ஆசனங்களை உள்ளடக்கக்கூடிய வகையில், கேட்போர்கூட வசதி, ஏனைய வசதிகளுடன், திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி, 365 நாள்களும் 24 மணித்தியாலங்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில், இலங்கை வங்கித் தலைவரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான டொனால்ட் பெரேரா, இலங்கை வங்கி பொது முகாமையாளர் சரத் பண்டார, விற்பனைகள் மற்றும் நெறிப்படுத்தல் முகாமைத்துவ பிரதிப் பொது முகாமையாளர் சீ.அமரசிங்க, கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் டி. எம்.கே.எஸ். திசாநாயக்க, சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் திருமதி பி.பி.எம்.விஜயசேகர, இலங்கை வங்கி ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X