2025 மே 03, சனிக்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப் பகுதியில், சொட்கன் துப்பாக்கி மற்றும் 5 ரவைகளுடன், கந்தளாய் - பேராறு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர், நேற்று (19) மாலை கைதுசெய்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

அநுராதபுரம் - சாலியபுர இராணுவ வீரர்களின் பயிற்சி, கந்தளாய்க் குளத்துக்கு மேலே உள்ள காட்டுப் பகுதியில் இடம்பெற்ற வேளையில், மேற்படி நபரை இராணுவத்தினர் பிடித்து, அக்போபுர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மிருகங்களை வேட்டையாடுவதற்கு மேற்படி துப்பாக்கி, ரவைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று, விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக, அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X