2025 மே 14, புதன்கிழமை

தென்னங்கன்றுகள் வழங்கி வைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 செப்டெம்பர் 30 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை புஹாரிநகர், ஈச்சநகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தென்னங்கன்றுகள், நேற்று (29)  வழங்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சி சேருவிலை தொகுதியின் பிரதான அமைப்பாளர் டொக்டர் அருண சிறிசேனவின் ஊடாக, மகரூப் றியால்தீனின் வேண்டுகோளிற்கிணங்க 1,000 தென்னங்கன்றுகள் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த டொக்டர் அருண சிறிசேன,

“கிழக்கு மாகாண  சபை கழைக்கப்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களின் உதவியுடன், பிரதேச வீதி அபிவிருத்திகள், வீடுகள், கழிப்பறைகள் அமைத்துக் கொடுத்தல் போன்ற பல சேவைகளை செய்யத் திட்டமிட்டுமிட்டிருக்கின்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X