2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தேசிய கடல்சார் வள பாதுகாப்பு வாரம்; பிரதான வைபவம் நாளைமறுதினம்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

தேசிய கடல்சார் வளப் பாதுகாப்பு வாரம், இம்மாதம் 19ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் கிழக்கு மாகாண மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதான வைபவம், திருகோணமலை மாவட்டச் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவின் தலைமையில், உப்புவெளி கடற்கரையோர பிரதேசத்தில் நாளைமறுதினம் (23) காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது 07 கிலோமீற்றர் நீளமான கரையோரப் பகுதி தூய்மைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், இவ்வாரத்தில் மாவட்டத்தின் பல கடற்கரையோரங்களில் தூய்மைப்படுத்தும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கலந்துகொள்ளும் மேற்படி வைபவத்தில், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்சனி லஹந்தபுர, திணைக்களத் தலைவர்கள், முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X