Editorial / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், தீஷான் அஹமட்
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களை, ஆசிரியர் சேவை 3 -।।க்குள் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை, அடுத்த மாதம் நடைபெறுமென, கல்வியமைச்சின் கண்காணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மஹரூப் தெரிவித்தார்.
இந்த நியமனம் தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த வருடம் தொண்டராசிரியர் நியமனத்துக்கான அமைச்சரவை அங்கிகாரம் பெறப்பட்டிருந்தது. அதன்பின்னர், நியமனத்துக்குத் தகுதியான தொண்டர்களின் விவரங்களை நாம் கிழக்கு மாகாண கல்வியமைச்சிடம் கோரியிருந்தோம்.
இதற்கமைய கடந்த சில தினங்களுக்கு முன்பே, தொண்டராசிரியர்களின் விவரங்கள், மாகாண அமைச்சில் இருந்து எமக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, தொண்டராசிரியர்களுக்கான நேர்முகத்தேர்வு, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சின் நான்காம் மாடியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம்,13ஆம், 14ஆம் திகதிகளில் நடைபெறும்.
நேர்முகத்தேர்வுக்காகத் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களுக்கு, நேர்முகத்தேர்வுக்கான கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago