2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தொற்றாளர்களின் எண்ணிக்கை கிண்ணியாவில் 100ஐ தாண்டியது

Princiya Dixci   / 2021 மார்ச் 01 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

2021 ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 28 வரையுமான காலப்பகுதிக்குள்  கிண்ணியா சுகாதார  பிரிவில் 107 கொரோனா    தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்னார். இதில் 102 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாண்டு முதலாவது தொற்றாளர், ஜனவரி மாதம் 1ஆம் திகதி 49 வயதான பெண் ஒருவர், கிண்ணியா அகமட் லேனில் இருந்து அடையாளம் காணப்பட்டார்.

அத்துடன், பெப்ரவரி மாதம் 23ஆம் கொரேனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் மரணமானார். இவரோடு முதல் நிலை தொடர்பாளர்களாக இருந்த 5 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இவர்கள் மாத்திரமே தற்போது, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசெம்பர் மாதம் வரையுமான காலப்பகுதியில்  கிண்ணியா சுகாதாரப் பிரிவில் 11 பேர் மாத்திரமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இவ்வாண்டு முதல் இரு மாதங்களில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டு, தற்போது தொற்றுப் பரவல் குறைவடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .