எப். முபாரக் / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில், சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரை, இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் எம்.எச்எம்.ஹம்ஸா, இன்று (17)உத்தரவிட்டார்.
பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த 28, 24 வயதுகளையுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும், திருகோணமலை தொலைத்தொடர்பு நிலையங்களில் வேலை செய்து வந்த நிலையிலே, இணையத்தளம் ஊடாக சிப் அட்டைகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கான வரிகள் கிடைக்காமல் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், திருகோணமலை தலைமையகக் குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
28 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
37 minute ago