2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

தோட்டா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 05 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

துப்பாக்கித் தோட்டா மற்றும் துப்பாக்கிக் குழல்  வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 22 வயதுடைய ஒருவரை, இம்மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, செவ்வாய்க்கிழமை (4) உத்தரவிட்டார்.              

துப்பக்கித் தோட்டாவையும் துப்பாக்கிக் குழலையும் இச்சந்தேக நபர் மறைத்து வைத்திருப்பதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, சந்தேக நபரின் வீட்டில் திங்கட்கிழமை (3) இரவு சோதனை மேற்கொண்டபோது, தோட்டாவொன்றும் குழலொன்றும் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X