2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

தோணி கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 ஜூன் 15 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம், தீஷான் அஹமட்

தம்பலகாமம், பரவிப்பாஞ்சான் குளத்தில் புதன்கிழமை (14) மாலை  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, தோணி கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

முள்ளிப்பொத்தானை, ஹமீதியா நகரைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான நாகூரான் நசூர்தீன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தோணியில் இருந்தவாறு மீனவர்கள் மூவர், வலை வீசியபோது, தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது, இருவர் தோணியைப் பிடித்துக்கொண்டு உயிர் தப்பியுள்ளனர். இருந்த போதிலும், மேற்படி மீனவர்  உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X