2025 ஜூலை 28, திங்கட்கிழமை

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் காயம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தின் நான்கு பொலிஸ் பிரிவுகளில், நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த ஒன்பது பேர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை, புத்தளம் பிரதான வீதி 10ஆம் கட்டை பகுதியில், எருமை மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதி குடை சாய்ந்ததில், அதில் பயணித்த திருகோணமலை, நகரசபை விடுதி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வீ.கோடிஸ்வரன் (38வயது) மற்றும் சிறிஸ் கந்தராஜா (45வயது) படுகாயமடைந்தனர்.

இதேவேளை, சேருநுவர பொலிஸ் பிரிவில், மோட்டார் சைக்கிளொன்றை, பின்புறமாக சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மாவடிச்சேனை, கல்லடி பகுதியைச் சேர்ந்த டி. மதியழகன் (38 வயது) மற்றும் ஈச்சிலம்பற்று-இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த டி.நிரோஷன் (24 வயது) ஆகியோரே படுகாயமடைந்தவர்கள்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பகுதியில், சைக்கிளுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், சைக்கிளில் பயணித்த புல்மோட்டை 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முகம்மது ஹனீபா (58வயது) மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த அதே இடத்தைச்சேர்ந்த எஸ்.தமீம் (26வயது) ஆர்.நிலூபர் (30வயது) ஆகியோரும் காயமடைந்தனர். இவ்விபத்து தொடர்பாக புல்மோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுளக்கட பகுதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், கணவனும் மனைவியும் படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்தவர்கள் கோமரங்கடவெல, பக்மீகம பகுதியைச் சேர்ந்த ஜகத் (39 வயது) மனைவியான எஸ்.சிரியானி (36 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .