2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திருட்டுகளுடன் தொடர்புடையவருக்கு கட்டாயச் சிறை

Thipaan   / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்            

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபருக்கு, ஒன்பது மாத கட்டாயச் சிறை தண்டனை விதித்த திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.ஜி விஸ்வானந்த பெர்ணாண்டோ, அந்நபருக்கு 7,500 ரூபாய் தண்டப்பணமும் விதித்து உத்தரவிட்டார்.                   

திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவருக்கே, இந்தத் தண்டனையும் அபராதமும், புதன்கிழமை( 16) விதிக்கப்பட்டுள்ளது.                        

குறித்தநபர், திருகோணமலை பிரதேசத்திலுள்ள வீடுகளில், நீர் இறைக்கும் இயந்திரங்கள், இரும்புகள், இலத்திரனியல் பொருட்கள் போன்ற பல பொருட்களைத் திருடியுள்ளார்.

இதுதொடர்பில், பொலாஸாரால் வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், அந்நபர் குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளார். இதன்போதே, அவருக்கு மேற்குறித்த தண்டனையையும் அபராதத்தையும் நீதவான் விதித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .