Thipaan / 2016 ஜூலை 04 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதேசத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரையும் அவருக்குத் துணையாக இருந்து செயற்பட்டதாகக் கூறப்படும் ஒருவரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைதுசெய்துள்ளதாக கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை தானியகம பகுதியை சேர்ந்த இவர்கள் இருவரும், கிண்ணியாவுக்கு வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை விசாரித்து வருவதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
8 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Mar 2026