Niroshini / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை கிராமத்தில் உள்ள கோயிலில் திருமணம் செய்த சிறுவனையும் சிறுமியையும் பொலிஸார் கைது செய்து நேற்று செவ்வாய்க்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த சிறுவனை 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்வதற்கும் நீதிவான் ஜ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
திருமணம் செய்த சிறுவன் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஸ்ரீநிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த 14 வயதானவர் எனவும் சிறுமி மூதூர், கடற்கரைச் சேனை கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் 2015.12.24ஆம் திகதி திருமணம் செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை இவர்களை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago