Editorial / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்
திருகோணமலை நகரசபையின் வேலைத்திட்டங்களை, பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தல், பொதுமக்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளைப் பெறுகின்ற கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என, நகராட்சி மன்றத்தின் தலைவர் நா.இராஜநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
கடந்த காலங்களில் மக்கள் நகரசபைகளைத் தேடி வந்து, குறைகளைச் சுட்டிக்காட்டி தீர்வு பெற்றுச் சென்றனர் என்றும் தற்போது, பொதுமக்கள் வாழ்கின்ற வட்டாரங்களுக்குச் சென்று அவர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கலந்துரையாடல்கள் மூலம் பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் பொதுமக்களால் வழங்கப்படவுள்ள வரி மூலமாக நடைபெறுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக, அவர்களிடம் வெளிப்படையாக தெரியப்படுத்தி வருவதாகவும் இதன் மூலம், மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாக சென்று பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
நகரசபை எல்லைக்குள் உள்ள அன்புவழிபுரம் வட்டாரம், காந்திநகர், மனையாவெளி வட்டாரம் ஆகியவற்றில், இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது என்றும் தொடர்ச்சியாக ஏனைய வட்டாரங்களிலும் இக்கலந்துரையாடல்கள் நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.


41 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago
2 hours ago