Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஜூன் 25 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்டத்துக்குட்பட்ட குடிநீர் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவை, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையில், எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு திருகோணமலை - கண்டி வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
குடிநீர் சம்மந்தமான ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பான பொது மக்களது எழுத்து மூல முறைப்பாடுகளை பிரதேச பொறியியலாளர் காரியாலயத்தில் எதிர்வரும் வியாழக்கிழமைக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில், நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அல்லது 0262225 383 தொலைநகல் ஊடாக அனுப்பி வைக்கவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
33 minute ago