Suganthini Ratnam / 2016 ஜனவரி 18 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், வடிவேல் சக்திவேல்
'கிழக்கின் சக்தி' ஆளுநர் நடமாடும் சேவை எதிர்வரும் 24ஆம் காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணிவரை அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் மத்திய அரச அலுவலகங்கள், மாவட்டச் செயலகம் மற்றும் கிழக்கு மாகாணசபை உத்தியோகஸ்தர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.
ஆளுநரைச் சந்திப்பதற்காக மிகத் தொலைவிலிருந்து திருகோணமலைக்கு வரும்; மக்களின் நலன் கருதி இந்த நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்போது மாகாண அலுவலகங்களுக்கு மேலதிகமாக ஆட்பதிவுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை போன்றவற்றின் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அத்துடன், உடற்கூற்றுப் பரிசோதனை, இலவச பற்சிகிச்சை முகாம்;, ஆயுர்வேத, யுனாணி மற்றும் சித்த வைத்திய சேவைகளும் வழங்கப்படவுள்ளன.
இந்த நடமாடும் சேவையில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதி வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் மாகாணப் போக்குவரத்து அதிகாரசபையின் மூலம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
10 minute ago
19 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
31 minute ago
1 hours ago