Editorial / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்
அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடின், அடுத்த தேர்தல் வரை, வேலைநிறுத்தங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
இம்ரான் மகரூப் எம்.பியின் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள கிண்ணியா - ஜாயா வித்தியாலயத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று(13) காலை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய எம்.பி, தாம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் போது, இந்நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுமென வாக்குறுதியளித்ததாகக் குறிப்பிட்டதுடன், தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்பதற்கான சான்றே, தற்போது நடைபெற்றுவரும் வேலைநிறுத்தங்கள் பரைசாற்றுகின்றன என்றார்.
நான்கு மணிக்கு முடிவெடுத்து, ஐந்து மணிக்கு வேலைநிறுத்தம் செய்யும் அளவுக்கு நாட்டில் அதியுச்ச ஜனநாயகம் காணப்படுவதாகவும் கடந்த ஆட்சியைப் போன்று, வேலைநிறுத்தம் செய்யும் தொழில்சங்கத் தலைவர்களது வீடுகளுக்கு, வெள்ளை வான் வராது என்றும்,
அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வெவ்வேறு தொழிற்சங்கங்கள் மூலம் வேலைநிறுத்தப் போராட்டங்களை நிகழ்த்தி, மக்களின் அன்றாட நடவடிக்கைகளைக் குழப்புவதன் மூலம், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை உண்டாக்கவும் அரச அலுவலகங்களை முடக்கி, பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்யவும், மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையில் இவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கம் வழங்கிய அதியுச்ச ஜனநாயகத்தை, தொழிற்சங்கங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்கின்றன என்றும் இவ்வாறான செயற்பாடுகள், இனிவரும் காலங்களில் இந்த அரசாங்கத்தையும் மெல்ல மெல்ல சர்வதிகாரப் போக்குக்குச் செல்ல வழிவகுக்குமென்றும் இம்ரான் மகரூப் எம்.பி எச்சரித்தார்.
15 minute ago
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago