2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு கடும் எதிர்ப்பு

Janu   / 2024 ஜூன் 11 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர்.

 பாறை உடைப்பு இயந்திரத்துடன் வந்தவர்கள், சனிக்கிழமை (08)  அஉடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.

ஆனால், செவ்வாய்க்கிழமை (11)  காலை 9.45 மணிக்கு மீண்டும் மலை உடைப்பு வேலைகளை ஆரம்பித்த போது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் பாறை உடைப்பு இயந்திரம் வேலைகளை ஆரம்பித்த போது அப்பகுதிக்கு  மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று எதிர்ப்பை வெளியீட்டு தடுத்து நிறுத்தினர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,  தமிழ் அரசியல் வாதிகள் இவ்விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி  மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அ.அச்சுதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .