தீஷான் அஹமட் / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திலுள்ள தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்துக்கு நிரந்தரக் கோட்டக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்வருட ஆரம்பத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.ஜே.ஜப்பார் ஓய்வு பெற்றதையடுத்து இன்னும் நிரந்தரக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படாததால், தோப்பூர் பிரதேசப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி வீழ்ச்சியடைவதாக, பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்துக்கு நிரந்தர கோட்டக் கல்விப் பணிப்பாளரை நியமித்து, இப்பிரதேசக் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு, உரிய அதிகாரிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தோப்பூர் கோட்டத்துக்குள் 18 பாடசாலைகள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
2 hours ago