2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

நீதிமன்றில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஜூலை 14 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றில், தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபருக்கு சட்ட விரோதமான முறையில்  கேரளா  கஞ்சாவை வழங்க வந்த சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான்  உத்தரவிட்டார்.

திருகோணமலை, நீதிமன்றிற்குள் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில், நேற்று முன்தினம் (12) கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (13) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அத்துடன், ஏற்கனவே கைது செய்யப்பட்ட  இளைஞன்  கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரின் வழக்கிற்கு வந்தவரெனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X