2025 மே 14, புதன்கிழமை

நீரில் மூழ்கி இளைஞன் பலி

Editorial   / 2017 ஜூலை 30 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத், ஏ.எல்.எம்.ஷினாஸ், அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்

 

திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த நிதீஸ் முகம்மட் (24 வயது) எனும் இளைஞர், நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகியுள்ளாரென, நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று, குளித்துக் கொண்டிருக்கும் போது, நீரில் மூழ்கிய தன் சகோதரனைக் காப்பாற்றச் சென்ற போதே, மேற்படி இளைஞர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் காப்பாற்றப்பட்டவர், நிலாவெளி வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சகோதரர்கள் இருவரும், இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞனின் சடலத்தை, நேற்றிரவு (29) 8 மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .