2025 மே 14, புதன்கிழமை

நீர்த் தாங்கிகள் வழங்கி வைப்பு

வடமலை ராஜ்குமார்   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா, குறிஞ்சாக்கேணி, திருகோணமலை பட்டனமும் சூழலும் உப்புவெளி ஆகிய சுகாதர வைத்திய அலுவலக பிரிவிலுள்ள 90 பயனாளிகளுக்கு, தண்ணீர்த் தாங்கிகள் திங்கட்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  டி. எம். சரத் அபயகுணவர்த்தனவின் பரிந்துரைக்கு அமைவாக யுனிசெப்பின் நிதியுதவியுடன்  திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் டெங்கு பரவுதலை தடுக்கும் முகமாக முதல் கட்டமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தபட்டது.

இந்நிகழ்வில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட் தந்தை க. நிதிதாசன், இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கியதுடன், திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர்  தே.ஜெயவிஸ்ட்ணு, சுகாதார வைத்திய அதிகாரி விஐயகுமார், திருகோணமலை தொற்றுநோய்ப் பிரிவின் பொறுப்பதிகரி வைத்தியர் நிலோஐன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X