Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள, தோப்பூரில் செயற்பட்டுவந்த நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெல் கொள்வனவு செய்யும் நிலையக்கட்டடத்தொகுதி அழிவடைந்து, இரு தசாப்தம் கடந்தும், அது புனரமைக்கப்பட்டு மீண்டும் செயற்பாடுகுள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை என்று, விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தோப்பூரில் பிரமாண்டமான நெல் கொள்வனவு செய்யும் நிலைய கட்டடத்தொகுதிகள் பல அமைக்கப்பட்டு, இப்பிரதேச விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவுகளும் இடம் பெற்றுவந்தன. கடந்த கால யுத்தத்தின் போது, தோப்பூர், கிளிவெட்டி ஆகிய இடங்களில் இருந்த நெல்கொள்வனவு செய்யும் நிலையமானது, அழிவடைந்தது. அழிவடைந்து இரு தசாப்தம் கடந்தும் இன்னும் குறித்த நிலையம் புனரமைக்கப்படவில்லை. இதனால், இப்பிரதேச விவசாயிகள் கால போகத்தில் அறுவடை செய்கின்ற தங்களது நெல்லை, உத்தரவாத விலைக்கு விற்பனை செய்ய முடியாது மிகக் குறைந்த விலைகளில் தனியாருக்கு விற்பனை செய்யும் அவல நிலைக்கு முகம் கொடுக்கின்றனர்.
நெல் சந்தைப்படுத்தல் பிரிவினர், இது தொடர்பில் துரித கவனம் செலுத்தி தோப்பூர், கிளிவெட்டி ஆகிய பிரதேசங்களில் அழிந்துபோன நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெல்கொள்வனவு செய்யும் நிலையங்களை மீள நிர்மாணித்து இப்பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையத்தை மீண்டும் செயற்படவைப்பதன் மூலம், தோப்பூர், மூதூர், கிளிவெட்டி, வெருகல், சம்பூர், பள்ளிக்குடியிருப்பு மேங்காமம், சேருவில உள்ளிட்ட இன்னும் அநேகமான பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் நன்மைபெறுவார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
23 minute ago
27 minute ago