Thipaan / 2016 நவம்பர் 08 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
மூதூர் நகரில் இயங்கிவந்த நுண்நிதி நிறுவனமொன்றின் அலுவலகத்துக்குத் தீ வைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த எழுவரையும், சரியான ஆராதங்கள் சமர்ப்பிக்கப்படாமையால், மூதூர் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இல்லியாஸ் முபாரிக், நேற்றுத் திங்கட்கிழமை (07) விடுதலை செய்தார்.
2014.03.17ஆம் திகதி இரவு வேளையில் குறித்த நுண்நிதி நிறுவனத்துக்;கு இனந்தெரியாதோரினால் தீ வைக்கப்பட்டது. இதன்போது, அவ்வலுவலகத்திலிருந்த முக்கிய ஆவணங்கள், தளபாடங்கள், கணினிகள் போன்றன தீயினால் சேதமாகின.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அந்நிறுவனத்தில் கடமை புரிந்த 07 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கெதிரான வழக்கு மூதூர் நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்தது.
நிலையில் இவர்கள்தான் குறித்த நிறுவனத்தின் அலுவலகத்துக்கு தீ மூட்டினார்கள் என்பதற்கான, ஆதாரங்கள் எவையும் பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்படாததையடுத்தே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago