Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அத்தாபெந்திவௌ பகுதியில், கிழக்கு மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதியினால் நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று செவ்வாய்க்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் காணப்படுவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து, முதலமைச்சரின் நிதியிலிருந்து 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடமே திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட மாகாண காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பதி,
'இக்கிராமத்தில், கடந்த காலங்களில் சிறுநீரக நோயினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டதை நாம் அறிவோம். இந்த நோயிலிருந்து பாதுகாப்பதற்காகவே நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பித்தோம். கிராமத்திலுள்ள அனைவரும் இதனைப் பாதுகாக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார்.
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago