Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
தீஷான் அஹமட் / 2018 ஜூலை 15 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
1997ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரையின் 21ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, மூதூர் - கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று (15) காலை நடைபெற்றது.
இதன்போது, இறைவணக்கம், நினைவுரைகள், 21 தீபச்சுடர் ஏந்தல் போன்றன இடம்பெற்றன.
தனது சேவையால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்து பிரிந்து சென்ற இவரது நினைவு தினம், அவரது சொந்த ஊரான கிளிவெட்டியில் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ண சிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சர் சீ.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.நாகேஸ்வரன், மூதூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் க.துரைநாயகம், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பூ.ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago