Thipaan / 2016 நவம்பர் 10 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றில், பர்தா உடையணிந்து பட்டப்பகலில் திருடிய பெண்கள் மூவரை, புதன்கிழமை (09) கைது செய்துள்ளதாக, தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறிப்பாக,பெண்கள் நாடாத்தி வந்த கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்வது போல் பாசாங்கு செய்து, ஒருவர் கதைத்துக் கொண்டு இருக்கும் போது, மற்றவர் முச்சக்கரவண்டியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அவர்களை, பொதுமக்கள் ஒன்று திரண்டு துரத்தி சென்று பிடிக்க முயன்றபோதும், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் உதவியை நாடி மூவரையும் கைதுசெய்த பொலிஸார், முச்சக்கரவண்டிச் சாரதியையும் கைதுசெய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இப்பெண்கள் மூவரும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
3 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago