2026 மார்ச் 19, வியாழக்கிழமை

பணத்தினை திருடியவருக்கு விளக்கமறியல்

தீஷான் அஹமட்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஆலீம்நகர் பகுதியிலுள்ள வீடொன்றினை உடைத்து, 15 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருடிய சந்தேகநபரை, நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் நீதிமன்றம் நேற்று(28) உத்தரவிட்டது.

 

இந்தச் சம்பவத்தில், 58 வயதான நபரொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டு உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தப் போது, சூட்சுமமான முறையில் உள் நுழைந்த இந்த சந்தேகநபர், அலுமாரியில் மறைத்து வைத்திருந்த மேற்படி தொகையினை திருடியுள்ளதாக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப் போது, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X