2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பணத்தைத் திருடியவருக்கு கட்டாயச் சிறை

Thipaan   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை, உப்புவெளி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடந்த வருடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடிய நபரொருவருக்கு மூன்று மாத கட்டாய சிறைதண்டனை விதித்து, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச் விஸ்வாணந்த பெர்ணாண்டோ, நேற்றுப் புதன்கிழமை (14) உத்தரவிட்டார்.                               

திருகோணமலை, பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.                      

கடந்த வருடம், பாலையூற்று பகுதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தைத் திருடியதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதவான், மூன்று மாத சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டார்.                 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X