Thipaan / 2016 ஒக்டோபர் 14 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, மொறவெவ பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கலாசார மண்டபத்தின் கட்டட நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்கு வந்திருந்த நிர்மாணப் பணியாளர்கள் மூன்று பேரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரையும், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தும் வரை, எதிர்வரும் 17ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான், நேற்று (13) உத்தரவிட்டார்.
கடந்த 11ஆம்திகதி செவ்வாய்கிழமை இரவு, குறித்த பணியாளர்கள் தாக்கப்பட்டனர். அவர்களைத் தாக்கியோர் தேடப்பட்டு வந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட மொறவெவ பகுதியைச்சேர்ந்த ஒன்பது பேருக்கே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தாக்குதலில் காயமடைந்த மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
20 Mar 2026