2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பயிற்சியை முடித்து வெளியேறிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கவும்

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

-ஏ.எம்.ஏ.பரீத்

போட்டிப் பரீட்சை மூலம் அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டு குறிகியகால பயிற்சியை முடித்து அண்மையில் வெளியேறி அதிபர் நியமனம் பெற்ற சகல அதிபர்களுக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருகோணமலை  மாவட்ட ஐக்கிய தேசியக் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகருப் nதரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூவர்கானுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள  அனேகமான பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் நிலவுவதாக அறிகிறேன்.

எனவே, இவ்வாறான பாடசாலைகளில் புதிதாக நியமனயனம் பெற்றவர்களை அதிபர்களாக நியமித்து, சிறந்த பாடசாலை நிர்வாக கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டம்.

அத்துடன், இது தொடர்பாக எடுக்கப் படுகின்ற நடவடிக்கையினை எனக்கு ஒரு வார காலத்தக்குள் அறியத் தர வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X