அப்துல்சலாம் யாசீம் / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய நபருக்கு, 07 வருட கடூழிய சிறைத் தண்டணை விதிக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
கன்தளாய், முள்ளிப்பொத்தானை யுனிட் 07யைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய ஒருவருக்கே, இவ்வாறு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர், வீட்டை உடைத்து பணம் திருடியமை, துவிச்சக்கர வண்டியை திருடியமை, நபரொருவரை விருப்பமின்றி வாகனமொன்றில் ஏற்றிச் சென்று தாக்கியமை, அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்தமை போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிய வருகின்றது.
கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஐந்து வழக்குகளும் பதினைந்து குற்றச்சாட்டுகளும் இந்நபர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் 5 குற்றச்சாட்டுகளுக்கு தலா 1,500 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாத சிறைத் தண்டணை வழங்குமாறும், நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago