2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பள்ளியில் ஒன்றுகூடிய 17 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

ஹொரவப்பொத்தான  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுளக்கட ஜூம்மா பள்ளிவாயலில்,   ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மீறி ஒன்று கூடிய 17  நபர்களை  கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

35-; 50 வயதிற்குட்பட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

பள்ளிவாயல்களில் ஒன்று கூடி தொழுகை நடத்த வேண்டாமென, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை  கடந்த 13 ஆம் திகதி அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று (27) ஜும்மா தொழுகைக்காக ஒன்றுசேர்ந்தபோது, பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை கெப்பித்திகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவப்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .