Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜனவரி 29 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் வண்டி ஒன்றின் மீது யானை தாக்கிய சம்பவம் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் அமைந்துள்ள கொழும்பு பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பஸ் வண்டியின் முன் பகுதி சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சில நாட்களாக மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் மூன்று யானைகள் உட்புகுந்து அட்டகாசம் புரிந்து வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் உட்புகுந்துள்ள யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் முயற்சிகளை கல்குடா அனர்த்த அவசர சேவைகள் உறுப்பினர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .